ஐ - பாட் இழப்பை ஆப்பிள் ஈடு செய்யும்
இருபது ஆண்டு காலமாக, இசை ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்த 'ஆப்பிள்' நிறுவனத்தின் தயாரிப்பான 'ஐ - பாட்' தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டது.இனி ஆப்பிள் நிறுவனம், இசை ரசிகர்களுக்கு என்ன செய்து, ஐ - பாட் இழப்பை ஈடு செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு ஆப்பிள் தரப்பில், 'ஆப்பிள் மியூசிக்' அதை ஈடுகட்டும் என தெரிவித்துள்ளது. ஐ - பாட் இல்லை என்றாலும், ஆப்பிள் மியூசிக் வாயிலாக, பல்வேறு சாதனங்களில், அந்த உணர்வு தொடர்ந்து வாழும் என தெரிவித்துள்ளது.இருப்பினும், ஐ - பாட் இழப்புக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதன் ரசிகர்கள் உருகி பதிவிட்டு வருகின்றனர்.