உள்ளூர் செய்திகள்

ஐடெல் அறிமுகங்கள்

'ஐடெல்' நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் அதிகபட்ச விலை, 7,000 ரூபாய். விஷன் 1, ஏ 48, ஏ 25, ஏ23 என, நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஏ48 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் டிஸ்பிளே,6.1 அங்குல எச்.டி., திரை, கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.இதேபோல், ஐடெல் ஏ25 புரோ போனில், 2ஜி.பி., ரேம், 32ஜி.பி., சேமிப்பு திறன், பேஸ் அன்லாக் உள்ளிட்டவை இருக்கின்றன. விலை: விஷன் 1: 6699 ரூபாய்ஏ48: 5,999 ரூபாய் ஏ25புரோ: 4,999 ரூபாய்ஏ23: 3,799 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !