உள்ளூர் செய்திகள்

போல்டபிள் போன் அதிகரிக்கும் ஆர்வம்

'சாம்சங்' நிறுவனம், 'போல்டபிள்' வரிசை ஸ்மார்ட் போன்களான, 'கேலக்ஸி இசட் போல்டு' மற்றும் 'கேலக்ஸி இசட் பிளிப்' ஆகியவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், அடுத்தகட்டமாக, இந்த வரிசையில் புதிய போல்டபிள் போன்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.சாம்சங் நிறுவனம், புதிய போன்களுக்காக பி4, கியு4 மற்றும் என் 4 என, மூன்று சங்கேத பெயர்களை வழங்கி இருப்பதாகவும், இதில் என் 4 என்பது, இதற்கு முன் இல்லாத புதிய வகை போல்டபிள் போனாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.போல்டபிள் போனுக்கு உலகெங்கும் வரவேற்பு அதிகரித்திருப்பதை அடுத்து, புதிய போன்களை அறிமுகம் செய்ய, நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !