உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் லைட்

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான, போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கான செயலியான, இன்ஸ்டாகிராம், அதனுடைய, 'இன்ஸ்டாகிராம் லைட்' எனும் புதிய செயலியை, இந்தியாவிலும் சோதனை செய்து பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.இன்ஸ்டாகிராம் செயலி, 2 எம்.பி., அளவு மட்டுமே கொண்டதாகும் என்றும், இன்ஸ்டாகிராம் செயலியில் இருக்கும் அடிப்படையான அம்சங்கள், இந்த, 'லைட்' செயலியிலும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பழக்கம் இல்லாதவர்களுக்கான அடிப்படை செயலி இதுவாகும்.இந்தியாவில், ஆண்ட்ராய்டு போன்களுக்கான, லைட் செயலியை சோதித்து பார்க்க இருப்பதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட, ஒன்பது மொழிகளில், இந்த இன்ஸ்டாகிராம் லைட் செயலி சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !