டைவா டிவிகள் அறிமுகம்
'டைவா' நிறுவனம், புதிதாக 32 மற்றும் 39 அங்குல 'டிவி'களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவிகளில், வாய்ஸ் அசிஸ்டென்ட் கன்ட்ரோல் இருப்பது கூடுதல் சிறப்பு.இந்த வசதி இல்லாமலும் 32 மற்றும் 39 அங்குல அளவுகளில் கிடைக்கும். இந்த டிவியில் பல ஓ.டி.டி., செயலிகள் இன்பில்டாக வழங்கப்பட்டுள்ளன. 32 அங்குல டிவிகள், 20 வாட் ஸ்டீரியோ சர்ரவுண்டு ஸ்பீக்கர்கள் உடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 39 அங்குல டிவிகள், சர்ரவுண்டு சவுண்டு பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வந்துள்ளன.இந்த நான்கு விதமான டிவிகளிலும் இரு எச்.டி.எம்.ஐ., போர்ட்களும், இரண்டு யு.எஸ்.பி., போர்ட்களும் உள்ளன. ஆனால், புளுடூத் இணைப்பு வசதிகள் இல்லை.விலை:32 அங்குல டிவி: 11,990 ரூபாய்வாய்ஸ் அசிஸ்ட்டென்ட் உடன்: 12,490 ரூபாய்39 அங்குல டிவி: 17,990 ரூபாய்வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன்: 18,490 ரூபாய்.