உள்ளூர் செய்திகள்

ஒயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர் போர்ட்ரானிக்ஸ் அறிமுகம்

உள்நாட்டு நிறுவனமான, 'போர்ட்ரானிக்ஸ்', இந்தியாவில் புதிதாக 'போர்ட்ரானிக்ஸ் டாக் ஒன்' எனும், 'ஒயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர்' சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கறுப்பு வண்ணத்தில் மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கும் இந்த ஒன் கால் ஸ்பீக்கரை, ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றுடன் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.அத்துடன் 'ஸ்கைப், கூகுள் மீட், ஹேங்அவுட்ஸ்' உள்ளிட்ட அனைத்து வகையான செயலிகளிலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இது, 360 டிகிரியில் சுற்றுப்புற சப்தங்களை நீக்கி, குரலை மட்டும் கிரகித்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில், 2,600 எம்.ஏ.எச்., பேட்டரி இடம்பெற்றுள்ளது. அத்துடன் யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது. அறிமுக விலை: 8,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !