ஐபேடு மினி 5
'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஐபேடு மினி - 5' இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஐபேடு மினி - 4' வடிவமைப்பை போன்றே, மினி - 5-ம் இருக்கும் என்று கருதப்படுகிறது. 7.9 இஞ்ச் டிஸ்பிளே, 6.1 எம்.எம்., தடிமன், லைட்னிங் போர்ட், டச் ஐ.டி., 3.5 எம்.எம்., ஹெட்போன் ஜாக், இரண்டு கேமரா செட் அப் என எல்லாமே, மினி - 4ல் இருப்பது போலவே இருக்கும் என்கின்றனர். மைக்ரோபோன் இடம் மாறியிருக்கக்கூடும். மற்றபடி பெரிய அளவில் மாறுதல்கள் இருக்குமா என்பது சந்தேகமே.விலை கட்டுபடியாகும் வகையில் இருக்கும் என்பது நல்ல செய்தி. ஆப்பிள் தரத்தில் என்ன குறை! விலையில் தான் பிரச்னை!!