ஐபோன் 12 மினி
ஆப்பிள் நிறுவனம், அக்டோபர், 13ம் தேதியன்று நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில், அதன் ஐபோன் 12 வகை போன்களை மட்டுமின்றி, 'ஐபோன் 12 மினி' எனும் புதிய போனையும் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகின்றன.இந்த, 'ஐபோன் 12 மினி', 64ஜி.பி., 128 ஜி.பி., 256 ஜி.பி., ஆகிய சேமிப்புத் திறன்களுடன் வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் எதையும் ஆப்பிள் தெரிவிக்கவில்லை.