உள்ளூர் செய்திகள்

பணம் பெற ஐபோன் போதும்

'ஆப்பிள்' நிறுவனம் புதிதாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சிறு வணிகர்கள், கூடுதலாக எந்த ஒரு வன்பொருளும் இல்லாமல், ஐபோன் வாயிலாகவே வாடிக்கையாளர்களிடம், டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.அதாவது, இப்போது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் கார்டு வாயிலாக பணம் செலுத்துவதாக இருந்தால் பி.ஓ.எஸ்., மிஷினை பயன்படுத்துவது உள்ளிட்ட வழிகளில் பணத்தை பெறுகிறார்கள். ஆனால், ஐபோனில் புதிய வசதி வந்துவிட்டால், ஐபோனிலேயே வேறு எந்த வன்பொருள் இணைப்பும் தேவையின்றி, கார்டை வைக்கச் சொல்லி பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.இது 'ஆப்பிள் பே' பிராண்டின் ஒருபகுதியாக உருவாக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.ஆனால், விரைவில் ஐபோனில், சாப்ட்வேர் அப்டேட் வாயிலாக இந்த வசதியை வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !