ஐபோன் எஸ்.இ., 2022
'ஆப்பிள்' நிறுவனம் இம்மாதம் 8ம் தேதியன்று, அதன் முதல் மிகப் பெரிய ஹார்டுவேர் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, புதிய 'ஐபோன் எஸ்.இ., 3'அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.ஐபோன் எஸ்.இ., மட்டுமின்றி; மேம்படுத்தப்பட்ட ஐபேடு ஏர் மாடலும் அறிமுகம் ஆகலாம் என்றும் சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இந்நிகழ்ச்சிக்கான அழைப்பில், ஆப்பிளின் லோகோ பலவண்ணம் கொண்டதாக உள்ளது. இந்த வண்ணங்கள், வரப்போகும் சாதனங்களின் வண்ணங்கள் எவை என்பதை குறிப்பதாக உள்ளது எனக் கூறப்படுகிறது.'ஐபோன் எஸ்.இ., 3' அல்லது 'ஐபோன் எஸ்.இ., 2022' என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், இதற்கு முந்தைய மாடல்களை போல ஒரு பட்ஜெட் போனாக இருப்பினும், அதிக சக்தி வாய்ந்த சிப் உடன், 5ஜி இணைப்பு வசதியையும் கொண்டிருக்கும் என்கின்றனர்.இதேபோல், 'ஐபேடு ஏர்' சாதனமும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன், 5ஜி இணைப்பு வசதியையும் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.