சிம் கார்டு சிலாட் இல்லாத ஐபோன்
'ஆப்பிள்' நிறுவனம், அடுத்த ஆண்டு செப்டம்பரில் இருந்து, 'சிம் கார்டு சிலாட்' இல்லாத போன்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. போனுடனேயே அமைக்கப்பட்டு இருக்கும் இ - சிம் கொண்டதாக, இனி வரும் ஆப்பிள் போன்கள் இருக்கும் என தெரிகிறது.அனேகமாக இந்த மாறுதல், ஐபோன் 14 தயாரிப்பிலிருந்து அறிமுகம் ஆகும் என்கின்றனர், துறையை சேர்ந்தவர்கள். மேலும் இந்த போன், இரண்டு நெட்வொர்க்குகளை சப்போர்ட் செய்யும் விதமாக, இரண்டு இ_சிம் அமைப்புகளுடன் இருக்கும் என்கின்றனர். இதனால் இனி, இரண்டு நானோ சிம் கார்டுகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. நானோ சிம் கார்டு சிலாட்டை எடுத்து விடுவதன் வாயிலாக, தண்ணீர் புகுவதை இன்னும் சிறப்பாக தடுக்க முடியும் என்றும், வடிவமைப்பை மேலும் மேம்படுத்திக் கொள்ள இயலும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், நானோ சிம்கார்டு சிலாட்டில் வேறு பாகங்களை அமைத்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பும் கிட்டும் என்கிகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, 'ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ' ஆகிய மூன்று நிறுவனங்களுமே, இ - சிம் வசதியை சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளன. இதனால் நானோ சிம் கார்டு சிலாட் இல்லாவிட்டால், பெரிதாக எந்த சிக்கலும் இந்தியர்களுக்கு இருக்காது.