உள்ளூர் செய்திகள்

ஒரிஜினல் பாகம்தானா என எளிதாக கண்டுபிடிக்கலாம்

'ஐபோன்' பழுதாகி, அதை சரிசெய்வதற்காக அங்கீகாரம் பெறாத கடைகளில் கொடுக்கும்போது, ஒரிஜினல் பாகங்களை மாட்டாமல், போலியான அல்லது, வேறு நிறுவனங்கள் தயாரித்த பாகங்களை மாற்ற வாய்ப்பிருக்கலாம்.ஆனால், ஒரு போனில் இருப்பது ஒரிஜினல் பாகங்களா அல்லது, போலியான பாகங்களா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?சாதாரண மக்களால் அதை யார் உதவியும் இன்றி அறிவது என்பது கடினமான காரியம். ஆப்பிள் நிறுவனம் இப்பிரச்னையை தீர்த்து வைக்கும் விதமாக, ஒரு வழியை கொடுத்துள்ளது. ஐபோனில் அதன் இயங்குதளத்தை 'அப்டேட்' செய்வதன் மூலம், இந்த வாய்ப்பு கிடைக்கும். 'ஐ.ஓ.எஸ். 15.2' என்பதற்கு அப்டேட் செய்வதன் வாயிலாக, போனில் இருப்பது ஒரிஜினல் பாகங்கள்தானா என்பதை எளிதாக அறிந்துகொண்டு விடலாம்.அப்படி போலி பாகங்கள் ஏதாவது இருப்பின், 'தெரியாத பாகம்' என தகவல் தெரிவித்துவிடும். இந்த ஐ.ஓ.எஸ். 15.2 அப்டேட்டில், 'பார்ட்ஸ் அண்டு ஹிஸ்டரி' எனும் பிரிவுக்கு சென்றால், பாகங்கள் ஒரிஜினலா இல்லையா என்பது தெரிந்துவிடும். சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ள ஐ.ஓ.எஸ்., 15.2 விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !