இது புதுசு - கார்மின் ஸ்மார்ட் வாட்ச்
'கார்மின் விவோஆக்டிவ் 3' ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், இதயத் துடிப்பை கண்காணிப்பது, ஜி.பி.எஸ்., டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளுடன், 'விஓ2' எனும், நாம் பயிற்சியில் ஈடுபடும்போது உபயோகிக்கும் ஆக்ஸிஜன் அளவையும் தெரிவிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.வட்ட வடிவத்திலான இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி, 7 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும். இதில், பத்துக்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் செயலிகள் இணைக்கப்பட்டே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.விலை: 15,990 ரூபாய்