உள்ளூர் செய்திகள்

ஜாப்ரா இயர்பட்ஸ்

பிரபல, ஜாப்ரா நிறுவனம், அதன் புதிய,'எலைட் 85டி' ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸை, அறிமுகம் செய்துள்ளது.இரண்டு, 'சிப்செட்' உடன் வந்திருக்கும் இந்த இயர்போனில், வெளிப்புற சப்தங்களை தடுக்கும் வகையிலான, 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' வசதி உள்ளது. மேலும், இதை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள இயலும். சார்ஜ் ஏற்றினால், 5.5 மணி நேரம் இதைப் பயன்படுத்தலாம்.சார்ஜ் 'கேஸ்' உடன் சேர்த்து, மொத்தம், 25 மணி நேரம் பயன்படுத்தலாம்.டைட்டானியம் கறுப்பு வண்ணத்தில் வந்திருக்கும் இதன் விலை, 18,999 ரூபாய்.சார்ஜ் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும் என்பதோடு, காது எவ்வளவு நேரம் தாங்கும் என்பதையும் சொன்னால் நல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !