உள்ளூர் செய்திகள்

ஜாப்ராவின் புதிய ஹெட்போன்கள்

'ஜாப்ரா' நிறுவனம், புதிதாக, 'எவால்வ் 2 30' எனும் 'ஹெட்போன்'களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்போனில், 'ஆன்லைன் மீட்டிங்', 'வாய்ஸ் கால்' ஆகியவற்றுக்கென, இரண்டு 'மைக்ரோபோன்' அழைப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.இந்த ஹெட்போன்கள், 'ஸ்டீரியோ, மோனோ' என, இரண்டு விதங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டுமே, கறுப்பு வண்ணத்தில் வந்துள்ளன. இதில், 'மைக்ரோசாப்ட் டீம்ஸ்' சந்திப்புகளுக்காகவே, தனியாக ஒரு 'பட்டன்' கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், 'டீம்ஸ் மீட்டிங்'குக்குள் செல்வதும், வெளியேறுவதும் எளிதாக இருக்கும்.இந்த ஹெட்போன்கள், இம்மாத மத்தியிலிருந்து விற்பனைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விலை: ஸ்டீரியோ ஹெட்போன்: 12,149 ரூபாய்.மோனோ ஹெட்போன் : 10, 922 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !