ஜெப் ஐகானிக் அல்ட்ரா
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், 'ஜெப் ஐகானிக் அல்ட்ரா' எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பெரும்பாலான வாட்சுகளில் இல்லாத, ரத்த கொதிப்பை அளவிடும் வசதி, இதில் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.'நாய்ஸ், போட், ரியல் மி' நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக, இந்த வாட்ச் களமிறக்கப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்:1.78 அங்குல 'அமோல்டு' டிஸ்ப்ளே ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்ரத்த கொதிப்பையும் அறியலாம்100 'ஸ்போர்ட்ஸ் மோடு'கள்'புளூடூத் காலிங்' வசதி5 நாட்கள் வரை தாங்கும் பேட்டரிவிலை: 3,299 ரூபாய்