உள்ளூர் செய்திகள்

மீண்டும் ஜியோ பேஜஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் அதன்,'ஜியோ பேஜஸ்' எனும், இணையத்துக்கான பிரவுசரை மேம்படுத்தி, மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. பிரவுசரை பயன்படுத்தி நாம் செய்யும் வேலைகளை பிறர் அறிந்துகொள்ள இயலாத வகையிலான மறை மென்பொருளான, 'என்கிரிப்டட்' வசதியுடன் வந்துள்ளது, இந்த புதிய, ஜியோ பேஜஸ்.இப்போதைக்கு, எட்டு இந்திய மொழிகளை இந்த பிரவுசர் சப்போர்ட் செய்யும். ஜியோபேஜஸ் மூலம், உள்ளூர் செய்திகளை அறிந்துகொள்வதில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். கூகுள் பிளே ஸ்டோரில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.'குரோமியம் பிளிங்' பின்னணியில், இந்த வெப் பிரவுசர் செயல்படுகிறது. 'பிளிங்' உருவாக்கத்துக்குப் பின்னால், 'கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் , அடோப் சிஸ்டம், ஓபரா சாப்ட்வேர், இன்டெல், சாம்சங்' என, பல நிறுவனங்கள் உள்ளன.பயனர்கள், கூகுள், பிங், யாகூ ஆகிய தேடுபொறிகளையும் இதில் பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !