உள்ளூர் செய்திகள்

அப்படியே ஆப்பிள் மாதிரி

கடந்த மாதம், பெண்களுக்காக 'ஸ்லேட் ஸ்மார்ட் வாட்சை' அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது இரண்டு இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது, 'கிஸ்மோர்' நிறுவனம். 'கிஸ்பட் 809' மற்றும் 'கிஸ்பட் 851' என, இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.கிஸ்பட் 809, கிட்டத்தட்ட 'ஆப்பிள் ஏர்பாட்ஸ்' மாதிரியே பார்வைக்கு உள்ளது. கிஸ்பட் 851 பார்ப்பதற்கு 'ஏர்பாட்ஸ் புரோ' போலவே வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரு மாடல்களிலும், இயர்பட்சுகளை ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு மாடல்களுமே 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங்' வசதி கொண்டவை. கிஸ்பட் 851 சார்ஜை பொறுத்தவரை, 12 மணி நேரம் தாக்குப்பிடிக்கும். கிஸ்பட் 809 மாடல், 24 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்.இரண்டின் விலையும் 999 ரூபாய் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !