உள்ளூர் செய்திகள்

கடந்த ஆண்டின் சிறந்த டிவி, போன்கள்

'அமேசான்' நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்த, 2021ம் ஆண்டுக்கான ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் முதன் முதலாக நடத்திய இந்த தேர்வுக்காக, அதன் 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பங்கேற்று, தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போனாக, 'ஐபோன் 13' ஐ அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து, 'சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்.இ., 5ஜி' போனை, அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முதலிடத்தை 'ஆப்பிள்' நிறுவனமும், இரண்டாவது இடத்தை 'ஒன்பிளஸ்' நிறுவனமும் பிடித்துள்ளன. சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில், 'ரெட்மி 10 பிரைம்' வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை 'சாம்சங் கேலக்ஸி எம்.21' பிடித்துள்ளது. மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வரிசையில், 'ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி' போன் முதலிடத்துக்கு வந்துள்ளது. அடுத்த இடத்தில், 'ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ்' உள்ளது.ஸ்மார்ட் டிவிகளில், 'சாம்சங் 43 அங்குல கிரிஸ்டல் 4கே சீரிஸ் அல்ட்ரா எச்.டி., ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி' முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 'சோனி பிரேவியா 55 அங்குல 4கே அல்ட்ரா எச்.டி., ஸ்மார்ட் எல்.இ.டி., கூகுள் டிவி 55 எக்ஸ்.80 ஏ.ஜே., டிவி' பிடித்துள்ளது.மேலும், ஸ்மார்ட் டிவி பிரிவில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த பிராண்டாக, சாம்சங் உள்ளது. இரண்டாவது இடத்தில், சோனி உள்ளது. இவ்வாறு அமேசான் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !