லேட் ஆனாலும் லேட்டஸ்ட் விரைவில் ஜியோ 5ஜி போன்
'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், அதன் 'ஜியோ 5ஜி' ஸ்மார்ட்போனை, நடப்பாண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக, கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தது.ஆனால், குறிப்பிட்டபடி ஜூலையில் இந்த போனை அறிமுகம் செய்ய இயலவில்லை. எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில், இந்த போனின் தயாரிப்புக்காக, இந்திய தர நிர்ணய கழகத்தின் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் நிறுவனம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த 5ஜி போன் விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.