உள்ளூர் செய்திகள்

கசியும் தகவல்கள்!

'சாம்சங் கேலக்ஸி பட்ஸ் புரோ' இன்னும் அறிமுகம் ஆகாத நிலையில், அது குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன.இது ஒரு, ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன் ஆகும். இந்நிலையில், இது தண்ணீர் புகாமலிருக்கும் அம்சத்துக்கான, 'ஐ.பி.எக்ஸ்.,7' தரச் சான்றிதழ் பெற்றிருப்பதாகவும், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 28 மணி நேரத்துக்கு இதன் பேட்டரி தாக்குப் பிடிக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.மேலும், இந்த இயர்போன், 11மி.மீ., பாஸ் டிரைவர்கள் மற்றும், 6.5 மி.மீ., டுவீட்டர் கோஆக்ஸில் ஸ்பீக்கரும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஜனவரி துவக்கத்தில் இந்த இயர்போன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !