உள்ளூர் செய்திகள்

ஒரு கை பார்க்கலாம்

பிரபல ஜே.பி.எல்., நிறுவனம் இந்தியாவில் அதன், 'ஜே.பி.எல்., வேவ் 100 ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம், இதன் 'சார்ஜிங் கேசில்' மூடி கிடையாது என்பது தான். மூடி இல்லாத காரணத்தால், எளிதாக ஒரு கையாலேயே இயர்பட்சை எடுக்க வைக்க இயலும் என்கிறது, ஜே.பி.எல்., நிறுவனம். வழக்கமாக வரும் மூடியுடன் கூடிய சார்ஜிங் கேசை திறக்க இரு கைகளையும் பயன்படுத்த வேண்டியதிருக்கும். அதில் இந்த தொல்லை இல்லை. வாங்கினால், ஒரு கை பார்த்துவிடலாம். ஒரு முறை 'சார்ஜ்' செய்தால் 20 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம். கறுப்பு, நீலம் மற்றும் தந்தம் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விலை: 3,499 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !