உள்ளூர் செய்திகள்

எல்.ஜி., ரோலபிள் போன்

எல்.ஜி., நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற சி.இ.எஸ்., கண்காட்சியில், அதன் 'ரோலபிள்' ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதன்பின், ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் ரோலபிள் ஸ்மார்ட்போனை கையில் வைத்து காட்டும், 'ஹேண்ட்ஸ் ஆன்' வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் எல்.ஜி., ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் விரிந்து பின் சுருண்டுகொள்வதாக காட்டப்பட்டுள்ளது.அதாவது, ஸ்மார்ட்போனாக இருப்பது, ஒரு டேப்லெட் சைஸுக்கு விரிவடைகிறது. மேலும் மூன்று கேமரா செட் அப் இருப்பதும் வீடியோவில் தெரிகிறது. இது குறித்து, எல்.ஜி., தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !