உள்ளூர் செய்திகள்

நேரலை இசை நிகழ்ச்சி: அமேசான் மியூசிக் முயற்சி

'அமேசான்' விரைவில், 'லைவ் ஆடியோ ஸ்ட்ரீமிங்' சேவையை ஆரம்பிக்கும் என தெரிகிறது. 'அமேசான் மியூசிக்' வாயிலாக, அதன் வாடிக்கையாளர்கள், நேரலை இசை நிகழ்ச்சிகளை கேட்கும் சேவையை வழங்க உள்ளது.அமேசான் மியூசிக், 'போட்காஸ்ட் நெட்வொர்க்', இசை அமைப்பாளர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு பணம் கொடுத்து, லைவ் ஆடியோ சேவையை வழங்க இருக்கிறது. மேலும், பிரபல இசை நிறுவனங்களுடனும் இணைய உள்ளது.கூடுதலாக உள்ளூர் செய்திகள், விளையாட்டு செய்திகள், அரட்டை நிகழ்ச்சிகள் என பலவற்றையும் வழங்க உள்ளது. அமேசானிடம், 'அலெக்ஸா' குரல் உதவி மென்பொருளுடன் கூடிய ஸ்பீக்கர்களும் உள்ளதால், நேரலை இசை நிகழ்ச்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !