உள்ளூர் செய்திகள்

லாஜிடெக் கீபோர்டுகள்

'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக இரண்டு 'மெக்கானிக்கல் கீபோர்டு'களையும்; ஒரு மவுசையும் அறிமுகம் செய்துள்ளது. 'லாஜிடெக் எம்.எக்ஸ்., மெக்கானிக்கல், எம்.எக்ஸ்., மெக்கானிக்கல் மினி' என இரண்டு கீபோர்டுகளையும், 'எம்.எக்ஸ்., மாஸ்டர் 3 எஸ்' எனும் ஒரு மவுசையும் அறிமுகம் செய்து உள்ளது.இந்த கீபோர்டுகள், இரட்டை வண்ண 'கீகேப்'களுடனும், 'ஸ்மார்ட் பேக்லைட்டிங்' உடனும் வந்துள்ளன. இதனுடைய பட்டன்கள், 'டிராக்கிங்' வேகம் போன்றவற்றை, நாம் நமக்கேற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.புதிய மவுசு, மிகவும் வேகமாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் வந்துள்ளது. இந்த மூன்று சாதனங்களுமே, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களில் செயல்படக்கூடியவை.விலை: லாஜிடெக் எம்.எக்ஸ்., மெக்கானிக்கல்: 19,999 ரூபாய்லாஜிடெக் எம்.எக்ஸ்., மெக்கானிக்கல் மினி: 17,495 ரூபாய்.எம்.எக்ஸ்., மாஸ்டர் 3 எஸ்: 10,995 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !