உள்ளூர் செய்திகள்

டச் ஐ.டி., உடன் மேஜிக் கீபோர்டு

'ஆப்பிள்' நிறுவனம், அதன், 'டச் ஐ.டி.,'யுடன் கூடிய, 'மேஜிக்' கீபோர்டை தனியாகவும் விற்பனை செய்ய துவக்கி உள்ளது. இதுவரை இந்த கீபோர்டு, 'எம் 1 ஐமேக்' கம்ப்யூட்டருக்காக என பிரத்யேகமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியாகவும் கிடைக்கிறது.வழக்கமான, வெள்ளி அல்லது அலுமினியம் வண்ணத்தில் இந்த கீபோர்டு கிடைக்கும். நார்மல் மேஜிக் கீபோர்டு போலவே இருக்கும் இதில், டச் ஐ.டி., இருப்பது வசதியாகும். யாரும் சுலபமாக இந்த கீபோர்டை பயன்படுத்தி விட முடியாது. நம் கைவிரல் ரேகையை பதிவிட்டால் மட்டுமே, கீபோர்டு வேலை செய்யும் என்பது தான் இதில் சிறப்பு.இந்த கீபோர்டை, மேக் ஓ.எஸ்., 11.4 அல்லது அதற்கு மேம்பட்ட கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த முடியும்.விலை: 14,500 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !