மைக்ரோசாப்ட் சர்பேஸ் 4 லேப்டாப்
மைக்ரோசாப்ட் நிறுவனம், '11வது தலைமுறை இன்டெல் கோர்' கொண்ட, 'சர்பேஸ் லேப்டாப் 4'ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் லேப்டாப், 13.5 மற்றும் 15 அங்குல அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு வகை லேப்டாப்பிலும், 'டால்பி அட்மோஸ் சர்ரவுண்டு சவுண்டு' வசதி இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், மைக்ரோசாப்ட் செயலிகளின் பயன்பாடு மற்றும் அனுபவங்களுக்கு மிகவும் ஏற்றதாக இந்த லேப்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 16 ஜி.பி., ரேம் கொண்டதாகும்.இதன் விலை அதன் அம்சங்களைப் பொறுத்து, பல விதங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13.5 அங்குல மாடல் விலை, 1.03 லட்சம் ரூபாயிலிருந்து துவங்குகிறது. 15 அங்குல மாடல் விலை, 1.35 லட்சம் ரூபாயில் துவங்குகிறது.