மைக்ரோசாப்டின் புதிய லேப்டாப்
'மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் 4' கடந்த செவ்வாயன்று அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லேப்டாப், 13.5 மற்றும் 15 அங்குல திரையளவுகலில் அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டுமே தொடு திரை வசதி கொண்டதாகும். இவை கிட்டத்தட்ட, 17 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான பேட்டரியுடன் வந்துள்ளன. 'டால்பி அட்மோஸ்' இருக்கிறது. வைபை 6, புளுடூத் வி5.0, யு.எஸ்.பி.,டைப் சி மற்றும் டைப் ஏ போர்ட்டுகள் ஆகியவையும் உள்ளன. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. தோராய விலை: 13.5 அங்குல லேப்டாப் 75,000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.15 அங்குல லேப்டாப் 97,500 ரூபாயிலிருந்து துவங்குகிறது.