உள்ளூர் செய்திகள்

மினி போலீஸ்

சில ஆண்டுகளுக்கு முன், டக்... டக் ... என, யாராவது வீட்டு கதவை தட்டினால், யாரு என, போய் பார்ப்போம். அதற்கு பிறகு காலிங் பெல் வந்தது. அடுத்ததாக கேமரா பொருத்தப்பட்டு, வந்திருப்பது யார் என்பதை வீட்டுக்குள் இருந்தபடியே அறிந்து கொள்ளும் வசதி வந்தது.ஆனால் வந்திருக்கும் நபர் சந்தேகத்துக்கு இடமான நபரோ என, அச்சம் வந்தால், அதை எப்படி உறுதி செய்துகொள்வது?அமேசான் இதற்காக ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. வந்திருக்கும் நபரின் முகத்தை வைத்து அவர் யார், குற்றச்செயலில் ஈடுபடும் நபரா, ஜெயிலுக்கு போய் வந்திருப்பவரா என சொல்லிவிடும்.வந்திருப்பவர் குறித்த சகல டேட்டாக்களையும் தந்து, தேவைப்பட்டால் நம்மை அலர்ட்டும் செய்துவிடும். இந்த சாதனம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. முதற்கட்டமாக, காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறது அமேசான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !