உள்ளூர் செய்திகள்

வீடியோ கேமிங் துறையில் கால் பதிக்கிறது நெட்பிளிக்ஸ்

'நெட்பிளிக்ஸ்' நிறுவனம், திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றில் வலுவாக காலுான்றி இருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, வீடியோ கேம்களையும் வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.இதற்காக இந்நிறுவனம், பேஸ்புக் மற்றும் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய, மைக் வெர்டு என்பவரை இப்பிரிவுக்கான உதவி தலைவராக நியமித்துள்ளது.நெட்பிளிக்ஸ் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள்ளாக, இந்த வீடியோ கேம் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.இப்போதைக்கு இந்த சேவைக்கு என, தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்க நெட்பிளிக்ஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.மைக் வெர்டு தலைமையில், கேமிங் பிரிவுக்கான தனி டீம் வெகுவிரைவில் உருவாக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !