உள்ளூர் செய்திகள்

கேமிங் களத்தில் குதிக்கும் நெட்பிளிக்ஸ்

கொரோனா, மனிதர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கியதை அடுத்து, 'வீடியோ, கேமிங்' போன்றவற்றுக்கான வரவேற்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதையடுத்து, பல நிறுவனங்கள் இத்துறைகளில் இறங்கி வருகின்றன. 'வீடியோ ஸ்ட்ரீமிங்'கில் மாபெரும் வரவேற்பை பெற்ற, 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம், அடுத்த கட்டமாக, 'கேமிங்' துறையிலும் கால்பதிக்கும் என தெரிகிறது. குறிப்பாக, 'ஆப்பிள் ஆர்கேட்ஸ்' போலவே, சந்தா மூலமாக விளையாட்டுகளை வழங்கும் திட்டத்தில் உள்ளது.தற்போது, சந்தா பெற்று வாடிக்கையாளர்களுக்கு, 'வீடியோ ஸ்ட்ரீமிங்' சேவைகளை வழங்கி வருகிறது, 'நெட்பிளிக்ஸ்'.உலகெங்கும் இதன் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அடுத்த கட்ட விரிவாக்கத்துக்கு இந்நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.ஆப்பிள் நிறுவனம், 'ஆப்பிள் ஆர்கேட்ஸ்' வாயிலாக, மாதம், 5 டாலர் சந்தாவில், வீடியோ கேம்களை வழங்கி வருகிறது. இதற்கு போட்டியாக களமிறங்க திட்டமிட்டுள்ள 'நெட்பிளிக்ஸ்', இதற்கான உயரதிகாரிகளை உலகெங்கும் தேடி வருகிறது. அத்துடன் ஏற்கனவே, 'கேம்'களை தயாரித்து கையில் வைத்திருக்கும் நிறுவனங்களிடமிருந்து, அவற்றை மொத்தமாக வாங்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !