புதிய கேமிங் மானிட்டர்கள்
'சாம்சங்' நிறுவனம், புதிதாக, மூன்று 'கேமிங் மானிட்டர்'களை அறிமுகம் செய்துள்ளது. 'ஒடிஸி' எனும் பெயரில் இந்த மானிட்டர்களை தென்கொரியாவிலும், உலகின் வேறு சில நாடுகளிலும் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் ஆக உள்ளது.ஒடிஸி ஜி.70 ஏ., ஜி. 50 ஏ., ஜி.30.ஏ., எனும் மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், ஜி.30 ஏ., மாடலில் மட்டும் 27 அங்குலம், 24 அங்குலம் என இரு அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளன. மற்ற இரண்டும் 27 அங்குலத்தில் மட்டும் வந்துள்ளன.வீடியோ கேம் விளையாட்டுக்கு மிகவும் ஏற்ற வகையில், இந்த மாடல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதே இவற்றின் சிறப்பு. விலையை பொறுத்தவரை, ஜி.70.ஏ., மாடலின் விலை, கிட்டத்தட்ட 62 ஆயிரம் ரூபாய் ஆகிறது. ஜி.50 ஏ., மாடல் விலை, 42 ஆயிரத்து, 500 ரூபாய் ஆகிறது. ஜி.30.ஏ., மாடலை பொறுத்தவரை, 27 அங்குல மானிட்டர் 20 ஆயிரத்து, 500 ரூபாயும்; 24 அங்குல மானிட்டர் 17 ஆயிரத்து, 500 ரூபாயும் ஆகிறது.