புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக, 'ஜெப் ஸ்மார்ட் பாட்' எனும், 'அலெக்ஸா' ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி உள்ளது.அலெக்ஸா மென்பொருள் மூலம் இந்த ஸ்பீக்கரை பயன்படுத்தி செய்திகளைக் கேட்கலாம், ஆடியோ புத்தகத்தை இயக்கலாம், வீட்டிலிருக்கும் சாதனங்களை தொலைவிலிருந்தே கட்டுப்படுத்தலாம், பார்ப்பதற்கு இந்த வாய்ஸ் அசிஸ்டென்ஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மிகச் சிறிதாக இருந்தாலும், 360 டிகிரி ஐ.ஆர்., பிளாஸ்டர் அம்சத்தை கொண்டிருப்பதால், ஸ்மார்ட் சாதனங்களை எங்கிருந்தாலும் இயக்கலாம். மற்றபடி ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கருக்கான அனைத்து அம்சங்களையும் இது கொண்டிருக்கிறது.விலை: 3,699 ரூபாய்