அடுத்தது டெஸ்லா போன்
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மின்சார கார் நிறுவனமான 'டெஸ்லா'வின் தலைவருமான எலான் மஸ்க், அடுத்த கட்டமாக, டெஸ்லா போனை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணைய பக்கங்களில் உலா வருகிறது.அனேகமாக இது வதந்தியாக கூட இருக்கலாம். ஏனெனில், இது குறித்து எலான் மஸ்க் இதுவரை எதுவும் பேசியதில்லை. ஆனால், ஸ்மார்ட்போன் குறித்த செய்தி மட்டும் வேகமாக பரவி வருகிறது.டெஸ்லா ஸ்மார்ட்போன் மற்ற போன்களை விட தொழில்நுட்ப ரீதியாக மிகவும் அட்வான்ஸாக இருக்கும் என்கின்றனர். எலான் மஸ்க்கின் சேட்டிலைட் பிராட்பேண்டு நிறுவனமான 'ஸ்டார்லிங்க்' உடன் இந்த போன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும், டெஸ்லா காருடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் கூறுகின்றனர். டெஸ்லா காரை திறப்பது, மூடுவது, ஆட்டொமேட்டிக் மோடுக்கு மாற்றுவது, காரை கண்காணிப்பது என பல விஷயங்களை இந்த டெஸ்லா போன் வாயிலாக செய்து கொள்ள முடியும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இன்னும் பல ஆச்சரியமூட்டும் அம்சங்கள் நிச்சயமாக இருக்கும் என்றும் அவை தெரிவிக்கின்றன. உண்மையில் டெஸ்லா நிறுவனத்துக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா என்பதை எலான் மஸ்க் சொன்னால் தான் உண்டு.