நான்கு வண்ணங்களில் நாய்ஸ்
'நாய்ஸ்' நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்சுகள் வரிசையில், இந்தியாவில் தற்போது 'நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் கிராண்டு ஸ்மார்ட்வாட்ச்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 1.69 அங்குல எல்.சி.டி., டிஸ்பிளேவுடன் வந்துள்ளது.அத்துடன், வாட்சின் முகத்தை 150 விதங்களில் மாற்றிக் கொள்ளலாம். மேலும், 60 பிட்னஸ் மோடுகளும் இதில் உள்ளன. இதயதுடிப்பு, இரத்தத்தில் ஆக்சிஜன், தூக்கம் ஆகியவற்றையும் கண்காணித்து அளவிடலாம். நான்கு வண்ணங்களில் வந்துள்ளது.விலை: 3,999 ரூபாய்.