நோக்கியா 5.3 வருகிறது
உலகின் பல்வேறு சந்தைகள், 'நோக்கியா 8.3 - 5ஜி' போன் அறிமுகத்துக்காக காத்திருக்கும் நிலையில், இந்தியாவில் விரைவில், 'நோக்கியா 5.3' அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அனேகமாக, இம்மாத இறுதியில், இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், இதன் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அனேகமாக, 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என்கின்றனர், சந்தை வல்லுனர்கள்.நோக்கியா 5.3 அறிமுகத்துடன் கூடவே, மேலும் இரண்டு போன்களை, எச்.எம்.டி., குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. அனேகமாக, அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட, 'சி சீரிஸ்' ஸ்மார்ட்போன்களாக அவை இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சிறிது நாட்கள் பொறுத்திருந்தால் எல்லாம் தெரிந்துவிடும்.