நோக்கியா எக்ஸ் 50
நோக்கியா நிறுவனம் விரைவில் அதன், 'நோக்கியா எக்ஸ் 50' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன், 6.5 அங்குலம் கியு.எச்.டி., திரை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, கேமரா இருக்கும் என்றும்; அது, 108 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.குவால்காம் ஸ்நாப்டிராகன் 775 எஸ்.ஒ.சி., இயங்குதளம் கொண்டதாக இருக்கும். மேலும், இதன் பேட்டரி திறன், 6,000 எம்.ஏ.எச்., கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. நோக்கியாவின் இந்த தயாரிப்பு, செப்டம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.