உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் புதிய 2 போன்கள்

'நோக்கியா' பிராண்டுக்கான உரிமத்தை பெற்றுள்ள, 'எச்.எம்.டி. குளோபல்' நிறுவனம், இரண்டு புதிய பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது.இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, 'நோக்கியா 110 4ஜி' மற்றும் 'நோக்கியா 105 4ஜி' ஆகிய இரு போன்களும், 4ஜி சப்போர்ட் செய்யக்கூடிய போன்களாகும்.இரண்டு போன்களிலும், எப்.எம்.ரேடியோ மற்றும் எல்.இ.டி., டார்ச் வசதியும் இருக்கிறது. இயர்போனை இணைக்காமலும், எப்.எம்., ரேடியோ சேவைகளை கேட்க முடியும். இரண்டு போன்களிலும், இன்டர்நெட் பிரவுசர் இருப்பது கூடுதல் சிறப்பு.'நோக்கியா 110 4ஜி' போனில், பின்பக்கத்தில் கேமரா சென்சார் இருக்கிறது. ஆனால், மற்றொரு போனில் இல்லை. இதேபோல், 'நோக்கியா 110 4ஜி' போனில், எம்.பி.3 பிளேயரும் இருக்கிறது. கூடவே, 32 ஜி.பி.,க்கான, மைக்ரோ எஸ்.டி., ஸ்லாட்டும் உள்ளது.இரண்டும் மூன்று வண்ணங்களில் வந்துள்ளன. இரண்டு போன்களும், 1.8 அங்குல திரை கொண்டவை. நோக்கியா பேட்டரி திறன் குறித்து கேட்க வேண்டியதில்லை. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 14 நாட்கள் தாக்குப் பிடிக்கும்.விலை: இன்னும் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !