நோக்கியாவின் அடுத்த அறிமுகங்கள்
நோக்கியா பிராண்டில், அடுத்து, புதிதாக இரண்டு போன்கள் விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள், ஸ்மார்ட்போன்கள் அல்ல, பியூச்சர் போன்கள் என்றும் சொல்லப்படுகிறது.'நோக்கியா 6300' மற்றும் 'நோக்கியா 8000' என, இந்த இரு பியூச்சர் போன்களும், 4ஜி வசதியுடன் கூடிய போன்களாகும். 'நோக்கியா 6300' மூன்று வண்ணங்களிலும்; 'நோக்கியா 8000' நான்கு வண்ணங்களிலும் அறிமுகம் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.எதிர்பார்க்கும் அம்சங்கள்: நோக்கியா 6300 4ஜி* இரண்டு சிம்* கே.ஏ.ஐ.ஓ.எஸ்.,* 2.4 அங்குல திரை* 1,500 எம்.ஏ.எச்., பேட்டரி* ஜி.பி.எஸ்.,* மைக்ரோ யு.எஸ்.பி., போர்ட்* 104 .7 கிராம் எடை*மூன்று வண்ணங்கள்நோக்கியா 8000 4ஜி* இரண்டு சிம்* கே.ஏ.ஐ.ஓ.எஸ்.,* 2.8 அங்குல திரை* 4 எம்.பி., ரேம்* 512 எம்.பி. சேமிப்பகம்* 32 ஜி.பி., வரை அதிகரிக்கலாம்* 1,500 எம்.ஏ.எச்., பேட்டரி* 110 கிராம் எடை* நான்கு வண்ணங்கள்