உள்ளூர் செய்திகள்

ஐ.ஓ.எஸ்., 16 அப்டேட் கைவிடப்படும் போன்கள்

'ஆப்பிள்' நிறுவனத்தின் இயங்குதள மென்பொருளான 'ஐ.ஓ.எஸ்., 16' அடுத்து அறிமுகமாக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சில ஆப்பிள் தயாரிப்புகளில் அதை பயன்படுத்த இயலாது என கூறப்படுகிறது.ஐபோன் 6 எஸ்., வகைகள், முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ., பழைய மாடல் ஐபேடுகள் ஆகியவற்றில் இந்த புதிய ஐ.ஓ.எஸ். 16ஐ பயன்படுத்த முடியாது என்கிறார்கள். இது குறித்த அறிவிப்பை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில், ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐபோன் 6 எஸ், ஐபோன் 6 எஸ்.பிளஸ்., முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ., ஐபேடு மினி 4, ஐபேடு ஏர் 2, ஐபேடு ஐந்தாம் தலைமுறை, 2015ம் ஆண்டு ஐபேடு புரோ மாடல்கள் ஆகியவற்றில் ஐ.ஓ.எஸ்., 16 ஐ பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !