உள்ளூர் செய்திகள்

பாப் கீபோர்டு மவுஸ்

'லாஜிடெக்' நிறுவனத்தின் புதிய கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவை, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த செவ்வாயன்று, 'லாஜிடெக் பாப் கீஸ் ஒயர்லெஸ் மெக்கானிக்கல் கீபோர்டு' மற்றும் 'பாப் மவுஸ்' ஆகியவை அறிமுகம் ஆகியுள்ளன. இந்த புதிய கீபோர்டில், எமோஜிக்கான சிறப்பு பட்டன்கள் உள்ளன. இவற்றை ரீபுரோக்கிராமும் செய்து கொள்ளமுடியும். மேலும் இந்த கீபோர்டின் பட்டன்கள், பழைய டைப்ரைட்டர் ஸ்டைலில் உள்ளன.இந்த கீபோர்டில் இரண்டு ஏ.ஏ.ஏ., பேட்டரிகள் போட்டால் போதும், இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. புதிய மவுசில் இருக்கும் ஒரு பட்டன் வாயிலாக, உரையாடலின்போது, உடனடியாக எமோஜிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதில் ஒரு ஏ.ஏ., பேட்டரியை போட்டால், இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.விலை: கீபோர்டு: 9,995 ரூபாய்மவுஸ்: 2,995 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !