உள்ளூர் செய்திகள்

பவர்பாயின்ட் பிரசன்டர் கோச்

'மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட் பிரசன்டர் கோச்' இதுவரை இணையதள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, டெஸ்க்டாப் மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த பவர்பாயின்ட் பிரசன்டர் கோச், நாம் எவ்வாறு உரையாற்றுகிறோம் என்பதை செயற்கை நுண்ணறிவியல் துணையுடன் கணித்து தெரிவிக்கும். எவ்வளவு வேகமாக பேசுகிறோம்; ஏற்ற, இறக்கமின்றி பேசுகிறோமா, அல்லது 'அதாவது, வந்து' என்பது போன்ற இடைவெளியை நிரப்பும் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறோமா என்பதை எல்லாம் கவனிக்கும். இறுதியில் நம் பேச்சில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற தொகுப்பறிக்கையையும் வழங்கிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !