ரெடியாகும் நோக்கியா
நோக்கியா பிராண்டுக்கான உரிமம் பெற்ற,'எச்.எம்.டி., குளோபல்', அடுத்து ஒரு பெரிய அறிமுக நிகழ்ச்சிக்கு தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது.நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாகச் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியில், நோக்கியா 9.3 பியூர் வியூ, நோக்கியா 7.3_5ஜி மற்றும் நோக்கியா 6.3 ஆகிய போன்கள் அறிமுகம் ஆகக் கூடும் என தெரிகிறது. இவற்றில், நோக்கியா 9.3 பியூர் வியூ போன், நிறுவனத்தின், 'பிளாக்ஷிப்' போனாக இருக்கும் என்றும் தெரிகிறது. இந்த போன், 108 மெகா பிக்ஸல் கேமராவுடன், '8 கே' வீடியோ ரிக்கார்டிங் வசதியும் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள்.அத்துடன், 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி மற்றும், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.