ரெட்ரேகன் டிரைடன்ட் புரோ எம் 693
'ரெட்ரேகன்' நிறுவனம், அண்மையில் 'ஒயர்லெஸ் ஆர்.ஜி.பி., கேமிங் கீபோர்டு' ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது 'ரெட்ரேகன் டிரைடன்ட் புரோ எம் 693' எனும் ஒயர்லெஸ் மவுசை அறிமுகம் செய்துள்ளது. 'கேமிங்' ஆர்வலர்களை மனதில் வைத்து இந்த மவுஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு பக்கவாட்டு பட்டன்கள், 7 'புரோக்ராமபிள்' பட்டன்கள் இதில் இடம்பெற்றுள்ளன.இதிலிருக்கும் ஆர்.ஜி.பி., எல்.இ.டி., லைட்டு களை விருப்பத்திற்கேற்ப சரிசெய்து கொள்ள முடியும். மேலும் 700 எம்.ஏ.எச்., பேட்டரி இடம்பெற்றிருப்பதால், 35 மணி நேரம் இடைவிடாமல் பயன்படுத்த முடியும். விலை: ரூ. 2,290