பிப்ரவரியில் வருகிறது சாம்சங் கேலக்ஸி எஸ் 22
'சாம்சங்' நிறுவனம், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள்ளாக, அதன் புதிய தயாரிப்பான 'கேலக்ஸி எஸ் 22' ஸ்மார்ட்போன் வரிசையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முந்தைய மாடலைப் போலவே, இந்த போனும், 'கேலக்ஸி எஸ் 22, எஸ் 22 அல்ட்ரா, எஸ் 22 பிளஸ்' என மூன்று மாடல்களில் வெளிவரும் என்கிறார்கள்.மேலும், இந்த போனில் தன்னுடைய சொந்த சிப்பை பயன்படுத்தாமல், 'குவால்காம் ஸ்நாப்டிராகன் சிப்செட்'டை பயன்படுத்தும் என தெரிகிறது.இந்திய சந்தையிலும் இந்த போன் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. மற்ற விபரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.