உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் மீண்டும் சாம்சங் லேப்டாப்புகள்

மீண்டும் இந்தியாவில் லேப்டாப் வணிகத்தில் இறங்கி உள்ளது, சாம்சங். இந்நிறுவனம் தற்போது ஏழு புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. 'சாம்சங் கேலக்ஸி புக் 2' வரிசையில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த லேப்டாப்புகள், '12 வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்' கொண்டவை.மேலும், 'கேலக்ஸி புக் கோ' பட்ஜெட் லேப்டாப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும், 'விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம்' கொண்டவை. கேலக்ஸி புக் 2 வரிசை லேப்டாப்களின் விலை, 65 ஆயிரத்து 990 ரூபாயில் துவங்குகிறது.கேலக்ஸி புக் கோ லேப்டாப் விலை, 38 ஆயிரத்து 990 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !