சாம்சங்கின் ஏ வரிசை போன்கள்
'சாம்சங்' நிறுவனம், இரண்டு புதிய போன்களை அடுத்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'சாம்சங் கேலக்ஸி ஏ 33 5ஜி' மற்றும் 'கேலக்ஸி ஏ 13 5ஜி' என இரண்டு, 'ஏ' வரிசை போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிறுவனம் அதன் மற்றொரு போனான, 'கேலக்ஸி எஸ் 22' ஸ்மார்ட்போனின் அறிமுகத்துக்கு பின், இவ்விரண்டு போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'சாம்சங் கேலக்ஸி ஏ 33 5ஜி' போனின் விலை, இதற்கு முந்தைய மாடலான 'கேலக்ஸி ஏ 32' போனை விட சற்று அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் ஆன, 'கேலக்ஸி ஏ 32' போன், 21 ஆயிரத்து, 999 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.'கேலக்ஸி ஏ 13 5ஜி' போனின் விலை இணைய தளங்களில் இன்னும் யூகிக்கப்படவில்லை.