உள்ளூர் செய்திகள்

குறைந்த செலவில் பழுது நீக்க சாம்சங் முயற்சி

'சாம்சங்' நிறுவனம், விரைவில் தயாப்பாளரால் சான்றளிக்கப்பட்ட, மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்க உள்ளது. இந்நிறுவனம் சுயமாக பழுதி நீக்கி கொள்ளும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்போன், டேப்லெட் வாடிக்கையாளர்களுக்கு ஒரிஜினல் பாகங்கள், பழுது நீக்கும் கருவிகள், பழுது நீக்குவதற்கான வழிகாட்டிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.தற்போது சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களை அறிமுகம் செய்வதால், வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த செலவில், தங்கள் சாதனங்களை பழுதி நீக்கி கொள்ள இயலும்.சுற்றுச் சூழலுக்கு உகந்த இந்த திட்டத்தினால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்து கொள்ள முடியும் என, சாம்சங் கருதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !