சாம்சங் நிறுவனத்தின் புதிய போன்
'சாம்சங்' நிறுவனம் 'சாம்சங் கேலக்ஸி ஏ 13 5ஜி' எனும் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மிகவும் பிசியாக இருக்கிறது. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 'கேலக்ஸி ஏ12' போனின் அடுத்த மாடலாகும், இந்த கேலக்ஸி ஏ.13 5ஜி போன்.இந்த புதிய ஸ்மார்ட்போனின் முதன்மை கேமரா, 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும் என செய்திகள் கசிந்துள்ளன. மற்றபடி, கேமராவை பொறுத்தவரை, இதற்கு முந்தைய மாடலான கேலக்ஸி ஏ12 போனில் இருக்கும் அதே அம்சங்கள் தான் இடம்பெறுகின்றன. கேலக்ஸி ஏ12 போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா இடம்பெற்றிருந்தது.மேலும், இந்த புதிய போன் 6.48 அங்குல முழு எச்.டி., திரை கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், 4 ஜி.பி., 6 ஜி.பி., 8 ஜி.பி., என மூன்று வகை ரேம்களுடன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பேட்டரியை பொறுத்தவரை 5,000 எம்.ஏ.எச்., பேட்டரியும்; 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது.