செம ரூட்டர்
வீட்டின் ஹாலில் இருக்கும், 'வை - பை' இன்டர்நெட்டின் சிக்னல், 'பெட் ரூம்'மில் இருக்கும் உங்களுக்கு விட்டு விட்டு கிடைக்கிறதா? இது போன்ற பிரச்னைகளை, 'ரூட்டு' போட்டு தீர்க்க வருகிறது, லிங்க்சிஸ் நிறுவனத்தின், வெலோப் வை - பை ரூட்டர்.பார்ப்பதற்கு, குட்டி புளூடூத் ஸ்பீக்கர் போல இருக்கும் இதை, 'லிங்க்சிஸ் ஆப்' மூலம், வை - பை மோடத்துடன் இணைத்து விட்டால், அதன் மூலம், இன்டர்நெட் கனெக் ஷனை உள்வாங்கி நமக்கு அளிக்கும். ஒரு ரூட்டரிலிருந்து இன்னொன்றுக்கு, அதிலிருந்து இன்னொன்றுக்கு என, சிக்னலை கடத்தி தந்துவிடும்.ரூம்களின் எண்ணிக்கை அல்லது நமது தேவையை பொருத்து, எத்தனை ரூட்டர் தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம். இனி, வை - பை சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நல்ல கண்டுபிடிப்பு.ஒரு பாகத்தின் விலை: ரூ.7,999 இரண்டு பாகங்களின் விலை: ரூ.14,999மூன்று பாகங்களின் விலை: ரூ.21,999